‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, பொலிஸ் உத்தியோகத்தர்களிடமிருந்து கிடைத்த நிதி நன்கொடை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், பேரழிவிற்குள்ளான நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்திலிருந்து 9,687,462 ரூபா தொகையை நிதி நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இதுவரை மூன்று சந்தர்ப்பங்களில் பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களின் ஒரு நாள் சம்பளத்திலிருந்து 74 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரின் பிரத்தியேக உதவியாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சி.சி. பமுனுஆரச்சியினால் இந்த நிதி நன்கொடை, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுலகத்தில் 22.04.2026 அன்று கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பொலிஸ் செயலகத்தின் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் உதய குமாரவும் கலந்துகொண்டார்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects