தேசிய உற்பத்தித்திறன் 5S தரச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 6-10-2023 அன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில், தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி சிறீகாந்தின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் பணிப்பாளர் W.M.D. சுரங்க குணரத்னவும், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன், தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் இணைப்பாளர் சுகத் பண்டார தசநாயக, உதவி அரசாங்க அதிபர் திரு. நவேஸ்வரன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக முக்கியஸ்தர்கள், தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டர்.
இந்த நிகழ்வில் களுவாஞ்சிக்குடி மற்றும் வெல்லாவெளி பிரதேச செயலகங்கள், ஆரையம்பதி பிரதேச சபை, களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, வாழைச்சேனை, ஏறாவூர் ஆதார வைத்தியசாலைகள், பிராந்திய வைத்தியசாலைகள், சுகாதார சேவைகள் பணிமனைகள் உள்ளிட்ட 46 நிறுவனங்களிற்கு 5 S தரச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டமையும் அதில் 38 சுகாதாரத்துறை சார்ந்த நிறுவனங்கள் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் வைத்திய கலாநிதி G. சுகுணன், வைத்திய கலாநிதி மயுரேஷ் மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரெத்தினம் ஆகியோரால் அனுபவப் பகிர்வு உரை ஆற்றப்பட்டதுடன், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை மற்றும் களுவாஞ்சிக்குடி பிரேச செயலகத்தினைப் பற்றிய ஆவணப்படங்களும் ஒளிபரப்பப்பட்டன.
வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனங்களும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.
3 Responses
Congratulations to all winners
சிறப்பு.. மிகச்சிறப்பு.
Sukunan doctor ❤️