கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முறுத்தானை கிராமத்தில் தரம் – 05 கல்வியை கற்றதன் பின்னர் கல்வியை தொடர முடியாத 25 மாணவர்களுக்கு “Catch-up” முறையில் கற்பித்தல் செயன்முறையை உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவனின் மேற்பார்வையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகம், கிரான் பிரதேச செயலகம் மற்றும் கல்குடா வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைந்து CERI நிறுவனத்தின் அனுசரணையுடன் இச்செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் தி.மதிராஜ், கிரான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவகர், CERI நிறுவன பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










