கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள ‘அம்பர்’ நிற எச்சரிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கடும் மின்னல் தாக்கங்கள் மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்கள் மற்றும் வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்குக் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறிப்பாக இன்று (05.05.2026) நண்பகல் வெளியிடப்பட்ட இந்த அவசர எச்சரிக்கையின்படி,

இன்றையதினம்  இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். அத்துடன், அப்பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை பெய்யும் காலங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இடி மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

01. திறந்தவெளிகளிலோ அல்லது மரங்களின் அடியிலோ நிற்பதைத் தவிர்க்கவும்.

02. நெல் வயல்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளில் வேலை செய்வதைத் தவிர்க்கவும்.

03. தொலைபேசிகள், கணினிகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் (மின் இணைப்புகளைத் துண்டிப்பது நல்லது).

04.மின்சார கம்பிகள் மற்றும் மின் கம்பங்களுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்கவும்.

05. வாகனங்களை ஓட்டும்போது பாதுகாப்புடன் இருக்கவும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects