இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து நடைபெற்ற கலந்துரையாடல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஜெர்மனியின் கூட்டாட்சியின் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் தெற்காசிய, தென்கிழக்காசிய மற்றும் ஓஷனியா பிராந்தியங்களுக்கான வெளிநாட்டு பொருளாதாரக் கொள்கைப் பிரிவின் பணிப்பாளரும் தலைவருமான டோபியாஸ் பியர்லிங்ஸ் (Tobias Pierlings) அவர்களுக்கும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரிக்கும் இடையிலான சந்திப்பு 27.05.2026 அன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கிலேயே இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிவரும் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அடிப்படையிலான கூட்டுறவை மேலும் பலப்படுத்துவதற்காக இணைந்து செயல்பட இருதரப்பும் இணக்கம் தெரிவித்தன.

நிகழ்வில் இலங்கைக்கான ஜெர்மன் தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியூமன் (H.E. Dr. Felix Neumann), ஜெர்மன் தூதரக அதிகாரிகள், இலங்கை சார்பில் பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

(பிரதமர் ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects