இலங்கையில் புலம்பெயர்வாளர்களை சட்டவிரோதமாக கடத்துதல் பற்றிய பொதுவான புரிதலை தேசிய மட்டத்தில் உருவாக்கும் நோக்கில் புலம்பெயர்தலை இலகுபடுத்துவதில் பணியாற்றும் பங்குதாரர்களுடனான தேசிய கலந்துரையாடல் ஒன்று 30-04-2026 அன்று கொழும்பில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலானது ஜக்கிய நாடுகள் சபையின் போதை மருந்து மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகத்தினால் (UNITED NATIONS OFFICE ON DRUG AND CRIME – UNODC) ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் தெற்காசியாவில் மனித வியாபாரம் மற்றும் மனித ஆட்கடத்தலை தடுத்தல் மற்றும் தீர்வினை பெற்றுக்கொடுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் ஓழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
மனித வியாபாரம் மற்றும் புலம்பெயர்வாளர்களை சட்டவிரோதமாகக் கடத்துதல் தொடர்பான பொதுவான கொள்கைகள், சட்ட ஏற்பாடுகள் பற்றியும் இலங்கையில் இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போதைய தேவைகள் மற்றும் கொள்கை முன்னெடுப்புகள் பற்றி பங்குபற்றுனர்களிடையே பொதுவான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் பங்குபற்றுனர்களிடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன் இலங்கையில் புலம்பெயர்வாளர்களை சட்டவிரோதமாகக் கடத்துதலுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் தொடர்பான குழுக் கருத்தாடல் ஒன்றும் இடம்பெற்றது.
இதில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் துணை சட்ட ஆலோசகர் நாயகம் றியாஸ் பாறி (Riyaz Bary – Deputy Solicitor General, Attorney General’s Department) குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் கோட்டபாய ரணசிங்க (Gotabaya Ranasinghe, Assistant Controller, Dept of Immigration and Emigration) கடற்படை புலனாய்வு பிரிவின் பதில் பணிப்பாளர் கப்டன் கே.பி.ஜி.எஸ் மதுதரங்க (KBGS Madutharanga, Rank: Captain, Designation: Acting Director Naval Intelligence) மற்றும் அம்கோர் தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சிரேஸ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் யோ. சிவயோகராஜன் (Y. Shivayogarajan, Senior Program Manager, Association of Mobilizing Community Resources – AMCOR) ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்விற்கு ஜரோப்பிய ஒன்றியத்தின் நல்லாட்சி மற்றும் நல்லிணக்கத்திற்கான செயற்பாட்டு துணைதலைவர் எட்வார்ட் ஸ்பாக்கா (Edoardo Spacca – Deputy Head of Operation / Good Governance and Reconciliation) அதிதியாக கலந்து கொண்டதுடன் ஜக்கிய நாடுகள் சபையின் போதை மருந்து மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகத்தின் பிராந்திய நிகழ்ச்சித்திட்ட அலுவலர் மஹ்டி ஹஷன் (Mahdy Hassan – Regional Programme Officer, UNODC Regional Office of South Asia) தேசிய நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் அனுஷh முனசிங்கே (Anusha Munasinghe, National Programme Coordinator, UNODC, Regional Office of South Asia) ஆகியோர் கலந்து கொண்டனர்.















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










