பாடசாலை மாணவர்களுக்கு கண் பரிசோதனை அவசியம் – வைத்தியர் ஜயருவன் பண்டார

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பாடசாலை மாணவர்களிடையே காணப்படும் கற்றல் குறைபாடுகள் மற்றும் கல்வியில் பின்னடைவு ஏற்படுவதற்கு அவர்களின் கண் பார்வைக் குறைபாடுகளே பிரதான காரணமாகின்றன.

எனவே பாடசாலை மாணவர்களின் கற்றல் குறைபாடுகளுக்குப் பின்னால் இருக்கும் கண் பார்வை பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிவது மிக அவசியமென தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்தார்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் 07.05.2026 அன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போது, அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய கண் வங்கியானது கடந்த 15 ஆண்டுகளாக இலங்கையில் பார்வையற்ற நிலையில் இருந்த ஆயிரக்கணக்கானோருக்கு இலவசமாக விழித்திரை மாற்று சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு அவர்களுக்குப் பார்வையை மீள வழங்கியுள்ளது. பொதுமக்களின் கண் தானம் மூலமே இந்த மகத்தான சாதனையை எம்மால் எட்ட முடிந்தது. தற்போது கண் சிகிச்சை சேவைகள் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. எனவே, அத்தியாவசியமான விசேட சத்திரசிகிச்சைகள் மற்றும் பாரிய பாதிப்புகளைக் கொண்ட நோயாளர்கள் மாத்திரம் வைத்தியர்களின் பரிந்துரையின் பேரில் தேசிய கண் வைத்தியசாலைக்கு வருவது போதுமானதாகும்.

சாதாரண தேவைகளுக்காக அனைவரும் கொழும்பிலுள்ள தேசிய கண் வைத்தியசாலைக்கு வருவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். பாடசாலை மாணவர்களிடையே காணப்படும் கற்றல் குறைபாடுகள் மற்றும் கல்வியில் பின்னடைவு ஏற்படுவதற்கு அவர்களின் கண் பார்வைக் குறைபாடுகளே பிரதான காரணமாகின்றன. இதனைத் தவிர்ப்பதற்காகவே சுகாதார அமைச்சு பாடசாலை மருத்துவப் பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இந்தப் பரிசோதனைகளுக்கு முறையாக உட்படுத்துவதன் மூலம் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும்.

மேலும், ‘மாறுகண்’ பாதிப்புள்ள சிறுவர்களை ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்காக அழைத்து வர வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் வளர்ந்த பின்னர் ஏற்படும் சிக்கல்களைச் சரிசெய்ய முடியாமல் போகலாம். அத்துடன், தேசிய கண் வங்கியின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (08.05.2026) சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது. இதுவரை 17 ஆயிரத்துக்கும் அதிகமான விழித்திரைகள் சேகரிக்கப்பட்டு, அவற்றில் 12 ஆயிரம் விழித்திரைகள் உள்நாட்டு நோயாளிகளுக்கும், ஏனையவை சர்வதேச நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects