அவுஸ்திரேலிய  அரசாங்கம் இலங்கை கரையோர பாதுகாப்புப் படைக்கு நன்கொடையாக வழங்கிய 12 கண்காணிப்பு ட்ரோன்கள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அவுஸ்திரேலிய  எல்லைப் பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் சாவரின் பார்டர்ஸ்’ கூட்டு முகமை பணிக்குழுவின் தளபதியும், கடல்சார் எல்லைக் கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் பிரட் சோன்டர் 12 நவீன கண்காணிப்பு ட்ரோன்களை இலங்கை கரையோர பாதுகாப்புப் படை பிரிவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளார்.

மிரிஸ்சவிலுள்ள கரையோர பாதுகாப்புப் படை தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை கரையோர பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரோஹன் ஜோசப் இந்த உபகரணங்களைப் பெற்றுக்கொண்டார்.

மேலும், நிகழ்வில் இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் இன்ஸ்பெக்டர் பால் எட்வர்ட்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதே  ட்ரோன் வழங்கப்பட்டமையின் முக்கிய நோக்கமாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது. 

குறித்த நிகழ்வு, அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படைக்கும் இலங்கை கரையோர பாதுகாப்புப் படைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவை மேலும் உறுதிப்படுத்தியுள்ளதாக நம்பப்படுகின்றது. 

கடல்சார் எல்லை முகாமைத்துவத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான ஒத்துழைப்பை இது பறைசாற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் இரு நாட்டு பாதுகாப்புப் படைகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட வேண்டிய கூட்டு நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects