ஓய்வூதிய சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம் – ஓய்வூதியத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கணினி அமைப்பு மேம்படுத்தல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஓய்வூதியத் திணைக்களத்தின் சேவைகள், இன்று (13.05.2026) முதல் வழமை போன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், கணினி அமைப்பை நவீனமயமாக்குவதன் மூலம் பொதுமக்களுக்கு மிகவும் திறமையான சேவையை வழங்கும் நோக்கில் இந்த மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் பொதுமக்கள் தங்களுக்குரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஓய்வூதிய முரண்பாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்பையும் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு நிலவும் ஓய்வூதிய முரண்பாடுகள் இந்தத் திட்டத்தின் கீழ் தீர்க்கப்படவுள்ளன.

இதற்கான நிலுவை மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வழங்குவதற்கான அனைத்து ஆரம்பகட்ட ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects