கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் முட்டை இன்குபேட்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளன.
கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை வலுவூட்டும் நோக்கத்துடன், 100 முட்டை இன்குபேட்டர்கள் 08.12.2023 அன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரிமாளிகையில் வழங்கி வைக்கப்பட்டது.
சீனாவின் யுனான் மாகாணத்திற்கான விஜயத்தின் போது பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க, சீனத் தூதுவர் 100 இன்குபேட்டர்களை பிரதமரிடம் கையளித்தார், மேலும் இந்த இயந்திரங்கள் விவசாய அமைச்சின் ஹடபிமா அதிகாரசபையால் நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளன.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇