தொடர்ந்தும் நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இன்று, மே 14ஆம் திகதி காலை நிலவரத்தின் அடிப்படையிலான சமீபத்திய வானிலை பகுப்பாய்வின்படி, நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இது இலங்கையை விட்டு விலகி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 48 மணித்தியாலங்களில் படிப்படியாக வலுவிழக்கக் கூடிய சாத்தியம் உள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects