மட்டக்களப்பில் அரச அதிகாரிகளுக்கு ஒழுக்காற்று விசாரணை நடாத்தல் தொடர்பான ஒரு நாள் பயிற்சி நெறி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 08.12.2023 அன்று இடம் பெற்றது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயளாலர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள்,விடய உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலக பதவி நிலை அதிகாரிகள் ,14 பிரதேச செயலகங்களில் கடமை புரியும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பதவி நிலை சாரா அலுவலகர்களுக்கான பயிற்சி நெறியாக இடம் பெற்றது.
ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளும் போது மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் மற்றும் அறிக்கையிடல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதன் போது அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து செயல்முறை ரீதியியாக ஆராயப்பட்டு கருத்துக்கள் அளிக்கை செய்யப்பட்டது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇