ஜூலை 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடர்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2026 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர் ஜூலை 17ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், இந்த ஆண்டின் தொடக்க ஆட்டத்தில் 2024 ஆம் ஆண்டு காலத்தில் (Season) சாம்பியன் மற்றும் ரன்னர்- அப் அணிகளான யாழ்ப்பாணம் மற்றும் காலி ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த ஆரம்பப் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது.

2026 லங்கா பிரீமியர் லீக் தொடரை ஜூலை 17ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 08 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இம்முறை போட்டிகள் கொழும்பு SSC மைதானம், கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம், ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects