அரச நிறுவனங்களில் திடக் கழிவுகளின் முகாமைத்துவத்தை உரிய முறையில் முன்னெடுக்கும் வகையில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் புதிய சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண ஆளுனர்கள், திணைக்கள பிரதானிகள், கூட்டுத்தாபன பிரதானிகளுக்கு இந்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இம் மாதம் 31ம் திகதி முதல் அனைத்து அரச நிறுவனங்களிலும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் கொள்வனவு மற்றும் அதன் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்கப்படவுள்ளது.
அத்துடன் நிறுவனத்திற்குள் தனிப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் அனைத்து நிறுவன பிரதானிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










