அமெரிக்க டொலரின் விற்பனை விலை 342 ரூபாயைக் கடந்து பாரிய உயர்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை மத்திய வங்கி இன்று (20.05.2026) வெளியிட்டுள்ள புதிய நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 342 ரூபாயைக் கடந்து பாரிய உயர்வை உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்துள்ளது.

மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை (Buying Rate) 332.08 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை (Selling Rate) 342.70 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

ஒரே நாளில் ஏற்பட்ட பாரிய மாற்றம் 19.05.2026 அன்று அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.23 ரூபாயாகவும், விற்பனை விலை 338.07 ரூபாயாகவும் காணப்பட்டது.

இதற்கமைய, நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் ஒரே நாளில் டொலரின் மதிப்பு மிகக் கடுமையான உயர்வைச் சந்தித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் அரச வங்கி ஒன்றில் இன்றைய தினம் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 345.20 ஆகவும், கொள்வனவு விலையை ரூ. 335.65 ஆகவும் அதிகரித்துக் காணப்பட்டது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects