பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சர்வு முன்னெச்சரிக்கை அறிவிப்பு!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல மாவட்டங்களுக்குப் புதிய மண்சர்வு முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையானது 07.10.2026 அன்று இரவு 7:00 மணி முதல் இன்று (08.10.2026) இரவு 7:00 மணி வரையிலான 24 மணித்தியால காலப்பகுதிக்குச் செல்லுபடியாகும்.

நிலவும் மழைடனான வானிலை காரணமாகப் பல பிரதேசங்களுக்கு இரண்டு மட்டங்களிலான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

மட்டம் 2 – அவதானமாக இருங்கள் (செம்மஞ்சல்/Amber)

பதுளை மாவட்டம்: பசறை பிரதேசம்

கேகாலை மாவட்டம்: மாவத்தகம மற்றும் ருவன்வெல்ல பிரதேசங்கள்

மட்டம் 1 – விழிப்புடன் இருங்கள் (மஞ்சள்/Yellow)

களுத்துறை மாவட்டம்: வலல்லாவிட்ட

கண்டி மாவட்டம்: உடுதும்பரை

கேகாலை மாவட்டம்: தெஹியோவிட்ட மற்றும் கேகாலை

இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, எஹெலியகொடை, அயகம, வெலிகேபொல மற்றும் குருவிட்ட

குறிப்பிட்ட பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் அவசர மண்சரவு நிலைமைகள் அல்லது மண்மேடுகள் சரிந்து விழுவது தொடர்பில் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects