ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 7.75 சதவீதத்திலிருந்து 8.75 சதவீதமாக இலங்கை மத்திய வங்கி அதிகரித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் அதிகரித்த எண்ணெய் விலைகளின் காரணமாக உள்நாட்டு எரிபொருள் விலைகள் அதிகரித்து, கடந்த ஏப்ரல் மாதம் பணவீக்கம் 5.4 சதவீதமாக அதிகரிப்பதற்கு வழிகோலின.
அதேவேளை, கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்புகள் 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளன.
அதிகரித்து வரும் பணவீக்கம், தனியார் துறையில் எரிபொருள் இறக்குமதி தேவையின் உயர்வு, வெளிநாட்டு துறையில் உருவாகும் அழுத்தங்கள் மற்றும் பணவீக்க எதிர்பார்ப்புகளை கட்டுப்படுத்துவதில் நிலவும் சவால்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நாணயக் கொள்கையை மேலும் இறுக்கமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










