நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் நிர்மாணிக்கப்படும் மிகப்பெரிய பன்முகப் போக்குவரத்துத் திட்டமாக, கண்டி பன்முகப் போக்குவரத்து முனைய அபிவிருத்தித் திட்டம் (KMTT) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
கண்டி நகருக்குள் மக்களுக்கு தரமான மற்றும் நவீன போக்குவரத்துச் சேவையை வழங்கும் நோக்கிலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இத் திட்டத்திற்கு இணையாக, கண்டி நகரின் வீதிகள் மற்றும் ஏனைய உள்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்கீழ் நிர்மாணிக்கப்பட்ட போகம்பர பாதசாரிகள் சுரங்கப்பாதை 27.05.2026 அன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
கண்டி பன்முகப் போக்குவரத்து மையத் திட்டத்திற்கான அணுகுவழிப் பாதையாக, 65,799,395.90 ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த பாதசாரிகள் சுரங்கப்பாதை, கண்டி நகர மக்களுக்கு மிகவும் பாதுகாப்பான, இலகுவான மற்றும் திறமையான போக்குவரத்து வசதிகளை வழங்கும்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










