உலக சுகாதார அமைப்பின் உயரிய சர்வதேச அங்கீகாரம் – சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சுகாதாரத் துறையின் வினைத்திறனான செயற்பாட்டால் சர்வதேச அங்கீகாரம் பெற்றுத் தருவதற்குப் பங்களித்த அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

கடந்த மாதம் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் 79 ஆவது உலக சுகாதார மாநாட்டில் உலக சுகாதார அமைப்பு அறிமுகப்படுத்திய தரநிலைகளின்படியும், உலகளாவிய பரிந்துரைகளின்படியும், தாயிடமிருந்து குழந்தைக்கு எச்ஐவி HIV மற்றும் சிபிலிஸ் (Syphilis) பரவுவதை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டுதல்கள் தெரிவிக்கபட்டது.

இது தொடர்பான மதிப்பீட்டுச் சான்றிதழை உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் வழங்கினார்.

டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், Dr. Tedros Adhanom Ghebreyesus மே 19ஆம் தியதியன்று மாநாட்டின் போது சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் வழங்கினார்.

இலங்கைக்கு நற்பெயரைப் பெற்றுத் தருவதில் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் வழங்கி, அதற்குப் பல்வேறு வழிகளில் பங்களித்த அதிகாரிகளின் சேவைகளை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ 01.06.2026 அன்று தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர், ஜனித தென்னக்கோனும், அத்துறையின் சுகாதாரப் பணியாளர்களும், அத்துடன் குடும்ப சுகாதாரப் பணியகத்தின் பணிப்பாளர், சந்திம சிறிதுங்க, மற்றும் சுகாதாரப் பணியாளர்களும் சுகாதார அமைச்சுக்கு வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் ஆற்றிய மற்றும் தற்போது ஆற்றிவரும் சேவைகளை அமைச்சர் பாராட்டினார். உலக சுகாதார அமைப்பால் இந்த சிறந்த சர்வதேச அங்கிகாரத்திற்காக சேவைகளைத் தொடர்ந்து சிறப்பாக ஆற்றிய சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் தனது நன்றியையும் தெரிவித்தார்.

மேலும், நாட்டிற்கு இத்தகைய புகழைப் பெற்றுத் தருவதற்காக கடந்த காலத்தில் பணியாற்றி, நீண்ட காலமாகப் பங்களித்த அதிகாரிகளையும் அமைச்சர் மரியாதையுடன் நினைவு கூர்ந்தார்.

பின்னர், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழை சம்பந்தப்பட்ட திணைக்களத்தில் காட்சிப்படுத்துவதற்காக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects