மதகு வழங்கும் ஆரோக்கிய தகவல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நார்த்திசு கட்டிகளை அகற்றுவதற்கான நவீன சிகிச்சை…….

எம்முடைய பெண்மணிகளில் பெரும்பாலானவர்களுக்கு மாதவிடாய் சுழற்சி முறையில் விவரிக்க இயலாத பல சங்கடங்களை எதிர்கொள்வதுண்டு‌ அதில் சிலருக்கு ஃபைப்ரொய்ட்ஸ் எனும் நார்த்திசு கட்டிகளும் ஏற்படும்.

இவை தீங்கற்ற கட்டிகள் என்றாலும்.. அளவுக்கு அதிகமாக வளர்ந்தால்.. அதனால் பாரிய பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். இத்தகைய தருணங்களில் அவர்களுக்கு யூட்ரின் ஓர்டரி எம்போலைசேசன் எனும் நவீன சத்திர சிகிச்சையற்ற சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கும், பெண்மணிகளுக்கும் இயல்பான அளவைவிட கூடுதலான வயிற்று வலி, அதிக ரத்தப்போக்கு , நீண்ட நாட்கள் நீடிக்கும் மாதவிடாய், இடுப்பு பகுதியில் வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் எனும் உணர்வு ..ஆகியவை ஏற்பட்டால்.. அவை அளவுக்கு அதிகமாக வளர்ந்துள்ள ஃபைப்ரொய்ட்ஸ் எனும் நார்த்திசு கட்டிகளின் பாதிப்பாக இருக்கலாம் என அவதானிக்க வேண்டும்.

இத்தகைய தருணத்தில் நோயாளிகளுக்கு வைத்தியர்கள் எம் ஆர் ஐ மற்றும் சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு கர்ப்பப்பையில் வளர்ந்திருக்கும் நார்த்திசு கட்டிகளின் அளவை அளவிடுவர். நார்த்திசு கட்டிகளின் அளவு சிறிதாக இருந்தால் பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலமாக நிவாரணம் வழங்கலாம்.

அதே தருணத்தில் அத்தகைய ஃபைப்ரொய்ட்ஸ் எனும் நார்த்திசு கட்டிகளில் அளவு ஐந்து சென்டிமீற்றருக்கு மேல் வளர்ந்து விட்டால்.. அதனை யூட்ரின் ஓர்டரி எம்போலைசேசன் எனும் நவீன சத்திர சிகிச்சையற்ற சிகிச்சை மூலம் முழுமையாக நிவாரணத்தை வழங்க இயலும்.

இத்தகைய தருணத்தில் நார்த்திசு கட்டிகளுக்கு செல்லும் குருதி ஓட்டத்தை தடை ஏற்படுத்தி, அதனூடாக நார்த்திசு கட்டிகளை சுருங்கச் செய்து.. அதன் பிறகு அதனை அகற்றி விடுவார்கள். இத்தகைய பாதிப்பு மீண்டும் ஏற்படாதிருக்க.. வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாக பின்பற்ற வேண்டும்.

வைத்தியர் ஸ்ரீதேவி

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects