இன்று ஆரம்பமாகவுள்ள சுற்றுலா இலங்கை அணிக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சுற்றுலா இலங்கை அணிக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (03.06.2026) ஜமேய்க்காவில் இப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

குசல் மெண்டிஸ் மீண்டும் அணித் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னரும், புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டதன் பின்னரும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணி விளையாடும் முதலாவது தொடர் இதுவாகும்.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கேரி கிரிஸ்டனின் முதலாவது சவாலும் இதுவேயாகும்.

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே இதுவரை 10 ஒருநாள் தொடர்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 6 தொடர்களின் வெற்றியை இலங்கை அணி தன்வசப்படுத்தியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 தொடர்களில் வெற்றியீட்டியுள்ளதுடன், ஒரு தொடர் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே இறுதியாக 2024ஆம் ஆண்டில் ஒருநாள் தொடரொன்று நடத்தப்பட்டதுடன், இலங்கையில் நடைபெற்ற இத்தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியிருந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இன்று களம் இறங்கும் இலங்கை அணி விபரம்:

பெதும் நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ் (அணித்தலைவர்), பவன் ரத்நாயக்க, சரித் அசலங்க, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, மிலான் ரத்நாயக்க, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, அசித்த பெர்னாண்டோ.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects