போதைப்பொருள் பற்றிய தகவல்களை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 அவசர அழைப்பு சேவையின் செயற்பாடுகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல்!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுக்கு இணையாக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 அவசர அழைப்பு இலக்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் 15.10.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நாடு முழுவதும் இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகங்கள், விநியோகங்கள் அல்லது அது தொடர்பான சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் குறித்த துல்லியமான தகவல்களைப் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்குவதற்காக இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் எந்தவொரு பிரஜையும் இவ்வாறான தகவல்களை வழங்க முடியும் என்பதுடன், தகவல் வழங்குபவர்களின் இரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்படுவதுடன் வழங்கப்படும் தகவல்கள் குறித்து மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதி அலுவலகம் மற்றும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுச் சபையின் நேரடி மேற்பார்வையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும் இச்சேவையானது, “முழு நாடுமே ஒன்றாக” ஊடக மையத்திலிருந்து இயங்குவதுடன், பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் மிகப் பாதுகாப்பாக இது தொடர்பாக பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல்களை வழங்க முடியும்.

மேலும், “முழு நாடுமே ஒன்றாக”தேசிய செயற்பாட்டிற்கு எதிர்வரும் நவம்பர் 05 ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியடையவுள்ளதுடன், அது தொடர்பாகவும், போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து நாட்டின் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்பதுடன், போதைப்பொருள் அற்ற சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த தேசிய செயற்பாட்டை மிகவும் பயனுள்ள வகையில் முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பான விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பணிப்பாளர் (பிரிவெனா) வண. மடோவிட்ட வஜிர புத்தி தேரர், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார, பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் காமினி சேனாரத்ன, கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சதுரி பின்து, இந்து சமய அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் வை. அனிருத்தனன், முஸ்லிம் சமய அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் ஆகியோருடன் முப்படையினர் மற்றும் ஏனைய தொடர்புடைய அரச நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects