2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பணப்பரிசு வழங்கும் நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமையை தேடித்தந்த 37 வீரர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்களுக்காக 61.38 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கும் நிகழ்வு 02.06.2026 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வு, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் நடைபெற்றது .

2024 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப், பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகள், 2025ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் மற்றும் பஹ்ரைனில் நடைபெற்ற 3 ஆவது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் இந்த நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

நிதிப்பரிசுகளின் விபரம் பின்வருமாறு:

2024 ஜப்பான் உலக பாரா தடகளப் போட்டி: மூன்று வீரர்களுக்கு 8.5 மில்லியன் ரூபாவும், அவர்களது பயிற்சியாளர்களுக்கு 1.7 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டது.

2024 பாரிஸ் பாராலிம்பிக் போட்டி: மூன்று வீரர்களுக்கு 20 மில்லியன் ரூபாவும், அவர்களது பயிற்சியாளர்களுக்கு 4 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டது.

2025 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: இரண்டு வீரர்களுக்கு 5 மில்லியன் ரூபாவும், அவர்களின் பயிற்சியாளர்களுக்கு 1 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டது.

2025 பஹ்ரைன் 3ஆவது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி: 11 இளம் வீரர்களுக்கு 18.18 மில்லியன் ரூபாவும், அவர்களின் பயிற்சியாளர்களுக்கு 3 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் ஒரு தனிநபரால் பெறப்பட்ட அதிகப்படியான தொகையாக, 2024 பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் இப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கே.ஏ. சமித துலான் என்ற வீரருக்கு 15 மில்லியன் ரூபா (150 இலட்சம்) பணப்பரிசு வழங்கி வைக்கப்பட்டது. மேலும், பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற ஜி.எல். லஹிரு அச்சின்த என்ற இளம் வீரருக்கு 5 மில்லியன் ரூபா (50 இலட்சம்) வழங்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே,

ஒரு வீரன் நாட்டுக்கு ஈட்டித்தரும் பெருமையை ஒருபோதும் பணத்தால் மதிப்பிட முடியாது என்றும், அவர்களின் அர்ப்பணிப்பை ஊக்குவிப்பதற்காகவே இந்த பணப்பரிசு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த கொடுப்பனவுகளை வழங்குவதில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும், தற்போது முறையான தகுதி வரம்புகளின் கீழ் வெளிப்படையான புதிய முறைமை உருவாக்கப்பட்டு இப்பரிசுகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) முன்வைத்த “பணக்கார நாடு – அழகான வாழ்க்கை” என்ற கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க, சர்வதேச மட்டத்திலான வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தொழில்முறைத் தகைமையை (Professionalism) உருவாக்குவதற்கான வழிமுறைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வெற்றிகளுக்குப் பிறகு பரிசுகளை வழங்குவது போல, வெற்றிகளைப் பெறுவதற்கு முன்னரே வீரர்களை உருவாக்குவதற்கான முறையான திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் இந்த நிதியுதவிகளை மேலும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

அதற்காகவே தொழில்முறை வீரர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட “Mission Olympic 2028” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இன்று பரிசுகளைப் பெற்ற பல வீரர்கள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டவர்கள் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அருண பண்டார, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் விளையாட்டுப் பணிப்பாளர் ஐ.பி. விஜேரத்ன உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects