மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு பகுதிக்கான பிறப்பு இறப்பு பதிவாளர் பிரிவிற்கும், மண்முனை தென் எருவில் பற்று பகுதிக்கான பொது விவாக பிரிவிற்கான பிரதேச பதிவாளரும் மற்றும் மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலக மகிழவட்டவான் பகுதிக்கான பிறப்பு இறப்பு பதிவாளர் பிரிவிற்கும் வவுணதீவு பொது விவாக பதிவாளர் பிரிவிற்குமான பிரதேச பதிவாளரும் பதிவாளர் நாயகத்தினால் 03.06.2026 அன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மேலதிக பதிவாளர் நாயகமுமான ஜே.எஸ்.அருள்ராஜினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதிப் பதிவாளர் நாயகமான க.நடராசா கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










