பலத்த காற்று குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டில் தற்போது நிலவி வரும் தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலையினால் நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர ‘அம்பர்’ நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று (09.06.2026) செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிக்கை, நாளை (10.06.2026) பிற்பகல் 03:30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, வட மாகாணம், வடமத்திய மாகாணம் மற்றும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.

இந்த மோசமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்த்துக்கொள்ளும் பொருட்டு, பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தால் இது தொடர்பாக வெளியிடப்படும் அடுத்தடுத்த அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects