ஜூன் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 27,043 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஜூன் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் மொத்தம் 27,043 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த  தரவுகளின்படி, மொத்த வருகையில் 42.0% பங்களிப்புடன் இந்தியாவிலிருந்து மாத்திரம் 11,216 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 

இதற்கு மேலதிகமாக, ஜூன் மாதத்தில்  ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) 1,938 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 1,562 பேரும், சீனாவிலிருந்து 1,496 பேரும், பங்களாதேஷிலிருந்து 1,241 பிரஜைகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த 2025ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில், மொத்தம் 138,241 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜூன் மாதத்திற்கான இந்த புதிய புள்ளிவிபரங்களின் வெளியீட்டுடன், 2026ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,049,065 (1.04 மில்லியன்) ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி,  இந்தியாவில்  261,476 பயணிகளும்,  ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) 100,031 பயணிகளும்,  ரஷ்யாவிலிருந்து  76,628 பயணிகளும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇




Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects