தேசிய ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டம் 2026-2030: பனை, கித்துல் மற்றும் முந்திரிகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்க திட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தேசிய ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டத்தை (NEDP) 2026–2030 வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக, பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு வழங்கக்கூடிய பங்களிப்புகள் குறித்த விசேட கலந்துரையாடல் 09.06.2026 அன்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டுச் சபையின் (EDB) உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

தேசிய ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் உன்னத நோக்கில், பாரம்பரியப் பயிர்களான தேயிலை, இறப்பர், தேங்காய் ஆகியவற்றுடன் பனை, கித்துல் மற்றும் முந்திரி போன்ற பெருந்தோட்டப் பயிர்கள் சார்ந்த தயாரிப்புகளுக்கு சர்வதேச சந்தையில் கூடுதல் மதிப்பை உருவாக்கி ஏற்றுமதி செய்வதை ஊக்குவிப்பது குறித்தும், பெருந்தோட்ட சமூகத்தின் பொருளாதார ரீதியிலான வாழ்வாதாரத்தை பலப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது அமைச்சர் சமந்த வித்யாரத்ன “பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு அடைந்துகொள்ள எதிர்பார்க்கும் ஏற்றுமதி இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட திட்டங்களுக்கு இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டுச் சபையின் நேரடி ஆதரவும், தலையீடும் இன்றியமையாதது என்பதை இக்கலந்துரையாடலின் போது நான் பலமாக வலியுறுத்தினார்.

மேலும் ,பெருந்தோட்டத் துறை மூலமாக தேசிய பொருளாதாரத்திற்கு அதிகளவிலான பங்களிப்பை வழங்குவதுடன், கிராமிய மக்களின் வருமானத்தை உயர்த்தி, இலங்கையில் ஒரு வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே தங்களின் முதன்மையான நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇




Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects