9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்று (18.06.2026) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெரிய கொண்டைக்கடலை கிலோகிராம் ஒன்றின் புதிய விலை 339 ரூபாவாகும் என்பதுடன், இதன் மூலம் நுகர்வோருக்கு 5 ரூபா நிவாரணம் கிடைக்கும்.
வெள்ளை கெக்குளு அரிசி கிலோகிராம் ஒன்று நாளை முதல் 196 ரூபா என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதுடன், அதன் மூலமான சேமிப்பு 3 ரூபாவாகும்.
பொன்னி சம்பா கிலோகிராம் ஒன்றின் புதிய விலை 229 ரூபா என்பதுடன், நுகர்வோருக்கு 6 ரூபா சேமிப்பு கிடைக்கும் என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிவப்பு நாடு அரிசி கிலோகிராம் ஒன்று நாளை முதல் 234 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் மூலம் நுகர்வோருக்குக் கிடைக்கும் லாபம் 5 ரூபாவாகும்.
சம்பா சிவப்பு கெக்குளு அரிசி கிலோகிராம் ஒன்றையும் 224 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என்பதுடன், அதன் மூலம் நுகர்வோருக்கு 5 ரூபா சேமிப்பு கிடைக்கும்.
கோதுமை மா (பாண் පිටි) கிலோகிராம் ஒன்று 159 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதுடன், இதன் மூலம் நுகர்வோருக்கு 10 ரூபா லாபம் கிடைக்கும் என சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு வெள்ளை நாடு அரிசி கிலோகிராம் ஒன்று 204 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன், அதன் மூலமான சேமிப்பு 5 ரூபாவாகும்.
வெள்ளைச் சீனியிலிருந்து நுகர்வோருக்கு 2 ரூபா லாபம் கிடைப்பதுடன், அதன் புதிய விலை 217 ரூபாவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளை கெக்குளு சம்பா அரிசி கிலோகிராம் ஒன்று 235 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன், அதன் மூலமான சேமிப்பு 5 ரூபா என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த திருத்தப்பட்ட புதிய விலைகள் இன்று (18.06.2026) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச கிளைகளிலும் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









