மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத்திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் தலைமையில் உலக உணவுத் திட்டத்தின் தனியார் பங்குதாரர்களுக்கான முகாமையாளர் ஹொலி ஹாட்டர் பங்கு பற்றுதலுடன் புதிய மாவட்ட செயலகத்தில் 17.06.2026 அன்று நடைபெற்றது.
இதன் போது மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத் தோட்டத்தின் முறைமையினூடாக பாடசாலை போசாக்கு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் மற்றும் பயனாளிகளுக்கான பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வருடம்14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 15 பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்டத்தினை மேம்படுத்துவதற்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் 27 பயனாளிகளுக்கு கோழி வளர்ப்பு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.
இத் திட்டத்தினூடாக மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் நஞ்சற்ற போசாக்கான உணவினை பெற்றுக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் திட்டமிடல் பணிப்பாளர்களான வீ.நவநிதன், உலக உணவுத்திட்ட மாவட்ட இணைப்பாளர் எவாஞ்செலி, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பயனாளிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த உலக உணவு திட்ட உயர் அதிகாரி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது முறையான கண்காணிப்பு அவசியம் என்பதுடன் சிறந்த விவசாயத்தினை மேற்கொண்டு சமூதாயத்தையும் மேம்படுத்த வேண்டும் என்றார்.












இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










