இறக்குமதி செய்யப்பட்டு, களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 6 மில்லியன் முட்டைகள் 13.12.2023 ,14.12.2023 திகதிகளில் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சதொச விற்பனை நிலையங்களினூடாக அவை விற்பனை செய்யப்படவுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதால் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் துறைசார் அமைச்சரின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇