2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை திருத்தப்பட்ட கால அட்டவணை வெளியீடு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (A/L) திருத்தப்பட்ட கால அட்டவணை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேயின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய திருத்தப்பட்ட பரீட்சை கால அட்டவணையின்படி, இம்முறை உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

அன்றிலிருந்து சில வாரங்கள் வரை பல்வேறு பாடத்துறைகளின் கீழ் நடத்தப்படவுள்ள இப்பரீட்சையானது, செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி சனிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில் ,பரீட்சார்த்திகள் தங்களுக்குத் தேவையான மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள 1911 (உடனடி சேவை), 0112785922 / 0112784537 / 0112786616 / 0112784208 ஆகிய இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects