இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 29.06.2026 அன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்தது.
அதன்பிரகாரம், 434 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 414 ரூபாவாகும்.
அத்துடன் 407 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 382 ரூபாயாகும்.
ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










