இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி ஜே.ஜி.எல்.எஸ். ஜயவர்தன, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்குரிய நியமனக் கடிதம், ஜனாதிபதி செயலகத்தில் 01.07.20026 அன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் அவரிடம் கையளிக்கப்பட்டது.
கலாநிதி ஜே.ஜி.எல்.எஸ். ஜயவர்தன, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகமாகவும் (நிறுவன ரீதியான பணிகள்) கடமையாற்றுகிறார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










