கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்திட்ட நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்திட்ட நிகழ்வுகள் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பிரதேச செயலக போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் க.புவினராஜ் இணைப்பாக்கத்தில் வாழைச்சேனை நகரில் 01.07.2026 அன்று நடைபெற்றது.

சர்வதேச போதைப்பொருள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் கொண்ட ஸ்டிக்கர்கள் முற்சக்கர வாகனங்களில் அதிதிகளினால் ஓட்டப்பட்டதுடன் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் இதன் போது மக்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் “விற்கின்ற – அடிமையான அனைவருக்குமான அறிவித்தல் – அகன்று செல்” எனும் வாசகத்தினை மையமாகக் கொண்ட துண்டு பிரசுரங்கள் மக்களுக்கு இதன் போது வழங்கப்பட்டன.

ஜுன் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை 03 ஆம் திகதி வரை “முழு நாடும் ஒன்றாக – தேசிய செயல்” திட்டத்துடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பொலிசாருடன் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்களும் சுவரொட்டிகளும் வழங்கப்பட்டது.

எமது நாட்டின் வளமான மாணவர்கள், இளைஞர் யுவதிகளின் வாழ்வை சீரழிக்கும் போதைப்பொருள் பற்றிய தகவல்களை 1818 எனும் இலக்கத்தினூடாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects