2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி முதல் ஜனவரி 31 ஆம் திகதி வரை குறித்த பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான நுழைவுச் சீட்டுகள் மற்றும் கால அட்டவணைகள் பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பங்கள் தனிப்பட்ட முகவரிகளுக்கும் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில், அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர் இருப்பின் www.doenets.lk என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇