2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோகிராமாகவும், ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு 500 தேயிலை கிராமங்களை உருவாக்கும் தேசிய திட்டத்தை பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சகம் செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, இம் மாதம் 15 ஆம் திகதி நாட்டின் 11 தேயிலை உற்பத்தி மாவட்டங்களில் உள்ள 144 தேயிலை ஆய்வாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி 144 தேயிலை கிராமங்கள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன் பிரதான ஆரம்ப விழா நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, ஹல்கொல்ல பகுதியில் நடைபெறவுள்ளது. அத்துடன் கண்டி, பதுளை, காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இதற்கான திட்டங்கள் நாளை (14.07.2026) ஒரே நேரத்தில் ஆரம்பமாகவுள்ளன.
சிறிய தேயிலை தோட்ட விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில், நவீன விவசாய தொழில்நுட்பம், காப்புறுதி மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள், மானியக் கடன்கள், கைவினைத் தேயிலை (Handmade Tea) தயாரிப்பு பயிற்சி மற்றும் தேயிலை கிராமங்களை சுற்றுலாத்துறையுடன் இணைத்தல் போன்ற பல சலுகைகள் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









