இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சம் (1.2 மில்லியன்) என்ற எல்லையைத் தாண்டியுள்ளது.

கடந்த ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜூலை 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,217,956 ஆக பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜூலை 01ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் 71,383 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் இதுவரை வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் அதிகமானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 16,610 ஆகும்.

இரண்டாவது அதி கூடிய சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (பிரித்தானியா) வருகை தந்துள்ளனர் என்பதுடன், அந்த எண்ணிக்கை 7,296 ஆகப் பதிவாகியுள்ளது.

மூன்றாவது அதி கூடிய சுற்றுலாப் பயணிகள் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 4,656 ஆகும்.

இதேவேளை, இந்த ஆண்டின் கடந்துள்ள காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 310,293 ஆகும்.

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 115,863 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 80,487 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அத்துடன், இந்த ஆண்டின் கடந்துள்ள காலப்பகுதியில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த மாதமாக பெப்ரவரி மாதம் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கையானது 279,328 ஆகக் குறிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects