உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஈரான் மீது அமெரிக்கா விதித்த புதிய கடற்படை முற்றுகை மற்றும் அதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (15.07.2026) மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி, ப்ரெண்ட் வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.19 டொலராகவும், டபிள்யூ.டி.ஐ (WTI) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.40 டொலராகவும் உயர்ந்துள்ளது. 

இது கடந்த ஜூன் மாத பாதியிலிருந்து பதிவான அதிகபட்ச விலை உயர்வு என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக எண்ணெய் விநியோகம் தடைப்பட்டமையே இந்த விலை உயர்வுக்கு முதன்மைக் காரணமாகும்.

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையின் 20 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects