காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியால சிங்கள பாடநெறியின் 2ம் கட்ட ஆரம்ப நிகழ்வு பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதரினால் 14.12.2023 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்பாடநெறியில் 71 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் வளவாளராக என்.துஜோகாந் கலந்து கொண்டு கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடவுள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇