இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதிக்கும், பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றுக்கொண்ட வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இன்று (16.07.2026) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

புதிய கடற்படைத் தளபதி தனது பதவியேற்பின் பின்னர், பிரதமரைச் சந்தித்த முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.

தேசிய பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இலங்கை கடற்படை ஆற்றும் பங்களிப்பு, அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் பலப்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் தேசிய அபிவிருத்திக்கான ஒத்துழைப்புகள் குறித்து இச்சந்திப்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இதன்போது, புதிய கடற்படைத் தளபதிக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர், இலங்கையின் கடல் எல்லைகளைப் பாதுகாத்தல், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் நலன்புரிச் சேவைகளுக்காகக் கடற்படை ஆற்றிவரும் தனித்துவமான சேவைகளைப் பாராட்டியதுடன், அவரது புதிய பதவியின் கீழ் கடமைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியும் கலந்துகொண்டார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects