வாய் புற்றுநோய் காரணமாக நாட்டில் நாளொன்றுக்கு மூன்று மரணங்கள் பதிவு – வைத்தியர் தனுஜா தக்ஷனி பதிராஜ

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

வாய் புற்றுநோய் காரணமாக நாட்டில் நாளொன்றுக்கு மூன்று மரணங்கள் பதிவாகி வருவதாக வாய் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் தனுஜா தக்ஷனி பதிராஜ தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையில் ஆண்களுக்கு மத்தியில் மிகவும் பரவலாகக் காணப்படும் புற்றுநோய் வகையாக வாய் புற்றுநோய் காணப்படுவதோடு, இலங்கைப் பெண்களுக்கு மத்தியில் அதிகளவில் பதிவாகும் 10 புற்றுநோய் வகைகளுக்குள்ளும் வாய் புற்றுநோய் உள்ளடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புகையிலை, சிகரெட் மற்றும் மதுபானப் பயன்பாடு ஆகியவை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதோடு, குறிப்பாக வெற்றிலை மெல்லும்போது பயன்படுத்தப்படும் பாக்கில் அடங்கியுள்ள புற்றுநோய் காரணி மிகவும் ஆபத்தானது மற்றும் சக்தி வாய்ந்தது என வைத்தியர் இங்கு வலியுறுத்தியுள்ளார்.

தினசரி தொழில்களில் ஈடுபடும் சில குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த சமூகத்தினர் இதன் தாக்கத்திற்கு அதிகம் உள்ளாவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்கள், மீனவச் சமூகம், மாணிக்கக்கல் மற்றும் சுரங்கத் துறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் சாரதிகள் ஆகியோர் இவர்களுள் அடங்குவர்.

தங்களது பணிச் சூழலில் ஏற்படும் அதிகப்படியான மன அழுத்தம், சோர்வு மற்றும் களைப்பைப் போக்கிக் கொள்வதற்காக இவர்கள் பெருமளவில் வெற்றிலை மெல்லுதல், புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாடுகளுக்குப் பழகியிருப்பதே இதற்கான அடிப்படைக் காரணம் என வைத்தியர் தனுஜா தக்ஷனி பதிராஜ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த அழிவுகரமான பழக்கவழக்கங்களில் இருந்து விலகியிருக்குமாறும், வாயில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தொடர்ச்சியாக அவதானத்துடன் இருக்குமாறும் சுகாதாரத் துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects