கொழும்பு பங்குச்சந்தையின் இன்றைய (17.07.2026) வர்த்தக செயற்பாடுகள், கடந்த 15 மாதங்களில் பதிவான மிகக்குறைந்த தினசரிப் புரள்வை (Turn over) பதிவு செய்துள்ளன.
இதன்படி, இன்றைய வர்த்தக முடிவில் அதன் தினசரிப் புரள்வு 722 மில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
இந்தப் புரள்வானது, கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான மிகக்குறைந்த தினசரிப் புரள்வாகக் கருதப்படுவதுடன், அன்றைய தினம் 792 மில்லியன் ரூபா புரள்வு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இன்றைய தினத்திற்குள் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 42.16 அலகுகளால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வர்த்தக முடிவில் அதன் பெறுமதி 21,405.41 அலகுகளாகப் பதிவாகியிருந்தது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










