இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் 90,122 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கிறது. 

வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 20,480 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 

இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 23% ஆகும். 

அதேபோன்று, சீனாவிலிருந்து 5,494 பேரும், பிரித்தானியாவில் இருந்து 9,277 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 5,487 பேரும் இக்காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ளனர். 

மேலும், இந்த வருடம் ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் ஜூலை 15 வரையான காலப்பகுதியில் ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 1,236,695 ஆகப் பதிவாகியுள்ளது. 

அவர்களில் இந்தியாவிலிருந்து 314,163 சுற்றுலாப் பயணிகளும்,பிரித்தானியாவில் இருந்து 117,844 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects