இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் 20.07.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளன.
இம்முறை பரீட்சைக்காக மொத்தம் 200,235 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்ததோடு, அவர்களுள் பாடசாலை விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 199,598 ஆகும்.
மேலும் 637 தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் இதில் உள்ளடங்குவர். நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 1,669 பரீட்சை மத்திய நிலையங்களில், 325 இணைப்பு மத்திய நிலையங்களின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இப்பரீட்சைக்கு இம்முறை 147,407 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் தங்களது பரீட்சை சுட்டிலக்கத்தை சரியாக உள்ளிடுவதன் மூலம் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான http://www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகியவற்றிற்குள் பிரவேசித்து பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி முதல் பின்வரும் வழிமுறைகளின் ஊடாக பெறுபேறு ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது:
அனைத்து பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் https://onlineexams.gov.lk/eic இணையத்தளத்தின் ‘Personal Account Login’ ஊடாக தங்களது பரீட்சை சுட்டிலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு பெறுபேறு ஆவணத்தை (Results Schedule) பதிவிறக்கம் செய்ய முடியும்.
அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றைப் பயன்படுத்தி, https://onlineexams.gov.lk/eic இன் ‘School Account Login’ பகுதிக்குள் பிரவேசித்து, அந்தந்த பாடசாலையின் முழுமையான பெறுபேறு ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து அச்சிடப்பட்ட பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அனைத்து மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் தத்தமது வலயத்திற்குரிய பெறுபேறு ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்வதற்காக பயனர் பெயர்களும் கடவுச்சொற்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் வினவல்களிருப்பின், பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
உடனடி அழைப்பு இலக்கம்: 1911
தொலைபேசி இலக்கங்கள்: 011284208 / 0112784537 / 0112785922
தொலைநகல் (Fax) இலக்கம்: 0112784422


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










