தேசிய சூழல் திருத்தச் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய சூழல் (திருத்த) சட்டமூலத்தை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன 21.07.2026 அன்று சான்றுரைப்படுத்தினார்.

1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சூழல் சட்டம், அத்துடன் 1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க மற்றும் 2000 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க தேசிய சூழல் (திருத்த) சட்டங்கள் மூலம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு கணிசமாக வலுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், தற்போதைய சுற்றாடல் மற்றும் நிறுவன ரீதியான சவால்களை எதிர்கொள்வதற்கு நடைமுறையிலுள்ள சட்டக் கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்பதைக் கருத்திற்கொண்டு இந்தத் திருத்தச் சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தச் சட்டத்தின் மூலம் சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல், முகாமைத்துவம் செய்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல், கழிவுகளை அகற்றுவது தொடர்பான ஒழுங்குமுறை பொறிமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்குப் பயன்படுத்தப்படும் பொறிமுறைகளை நவீனமயப்படுத்துதல் ஆகியவை நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய இச்சட்டமூலம் சட்டமூலம் 2026 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க தேசிய சூழல் (திருத்தச்) சட்டமாக அமுலுக்கு வருகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects