கொழும்பு மற்றும் புறநகர் உள்ளடக்கிய பகுதிகளில் மின்சார புகையிரத திட்ட பணிகள் அடுத்த வருடம் ஆரம்பம் – அமைச்சர் ருவன் செனரத்

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய மின்சார புகையிரத திட்டத்தின் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ருவன் செனரத், இப்புதிய மின்சார புகையிரத திட்டத்தின் ஆரம்பகட்ட திட்டமிடல் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்த மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர்,

புதிய மின்சார புகையிரத சேவை மருதானையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் முன்மொழியப்பட்ட திட்டத்துக்கு அமைவாக ருஹுணு குமாரி புகையிரததத்தில் பயணிக்கும் பயணிகள் பாணந்துறையில் இறங்கி, ஆரம்பிக்கப்படவுள்ள புதிய மின்சார புகையிரததத்தில் பயணிக்க முடியும் என பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளில் தற்போது செயற்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து உரையாற்றிய பிரதி அமைச்சர், அரச போக்குவரத்தை வலுப்படுத்தும் விதமாக மெட்ரோ பேருந்து சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects