கிரான் மத்திய கல்லூரி மாணவர்கள் மத்தியில் சட்டம் தொடர்பிலான அடிப்படைப்புரிதலை ஏற்படுத்துவதற்கும் எதிர்காலத்தில் சட்டத்துறையில் தமது மேற்கல்வி மற்றும் தொழில் பாதையினை அமைத்துக் கொள்வதற்குமான தூண்டலை ஏற்படுத்தும் நோக்கில் மாணவர் சட்ட மன்றம் ஆரம்பிக்கப்பட்டதுடன், இணைந்துகொண்ட அங்கத்தவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் திருமதி சுபாஷினி ருமணனால் “இலங்கையின் சட்ட முறைமை மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பான அறிமுக பயிற்சியானது கடந்த மாதம் வழங்கப்பட்டது .
அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு சட்டத்தின் நடைமுறை ரீதியான பிரயோகம் தொடர்பில் ஓர் புரிதலினை ஏற்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு நீதிமன்ற தொகுதிக்கு 14.12.2023 அன்று மாணவர்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கௌரவ நீதிமன்றங்களின் நடவடிக்கையினை அவதானித்து சட்டத்தின் நடைமுறை ரீதியான பிரயோகம் மற்றும் நீதிமன்ற நடைமுறை தொடர்பிலும் ஓர் அனுபவத்தினை பெற்றுக்கொண்டிருந்தனர்.
இந் நிகழ்வில் 58 மாணவர்கள், கல்லூரியின் செய்யற்றிட்ட இணைப்பாசிரியர் திரு.ற.கோவேந்திரன், சட்ட மன்ற பொறுப்பாசிரியர் திரு.க.குகராஜா மற்றும் பழையமாணவர் அமைப்பின் சார்பில் ஊடக பிரிவின் இணைப்பாளர் திரு. ஆ.காண்டீபன் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
செயற்பாட்டிற்கு அனுமதிவழங்கி சிறப்புற ஒழுங்கமைக்க உதவிய கௌரவ நீதிபதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர், கல்லூரியின் முதல்வர் திரு மா .தவராஜா அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்ததோடு செயற்பாட்டிற்கு எமது மாணவர்களினை வழிப்படுத்திய எமது பழையமாணவர் சட்டத்தரணி கு.புருசோத்தமன் அவர்களுக்கும் பாடசாலை குழுவினர் நன்றிகளை தெரிவித்திருந்தனர் .
தொடர்ந்து மாணவர் சட்ட மன்ற செயற்பாடுகளுக்கு அனுசரணை வழங்கும் 1999/2000 வகுப்பு மாணவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇