ஓகஸ்ட் மாதத்தின் முதலாவது பாராளுமன்ற வாரம் இன்றிலிருந்து (04.08.2026) ஆரம்பமாகின்றது.
இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்றப் பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுத் தொடர்பான குறைநிரப்பு மதிப்பீட்டு மற்றும் சம்பளம் தீர்மானிக்கப்படுதல் தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
நாளை (05) அவுஸ்திரேலியாவுக்கு அமெரிக்க டொலர் 2.5 மில்லியன் கடன் மீள செலுத்தப்பட்டமை சம்பந்தமான சைபர் குற்றச்செயலுடன் தொடர்புடைய மோசடி குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவினது அறிக்கை தொடர்பில் எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.
வியாழக்கிழமையன்று தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை திருத்தச் சட்டமூலம் மற்றும் விலங்குகள் திருத்தச் சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்கள் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்றப் பொதுச்செயலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று 7 தனிநபர் உறுப்பினர் முன்மொழிவுகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()







