மட்டக்களப்பு மாவட்ட வாழைச்சேனை கும்புறுமூலை பகுதியில் சான்றுபடுத்தப்பட்ட பாடசாலை மற்றும் தடுப்பு இல்லம் கிழக்கு மாகாண ஆளுநரினால் இன்று (04.08.2026) திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண வரலாற்றில் முதன் முறையாக கிழக்கு மாகாண நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் குறித்த இல்லம் திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபையின் மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதி மற்றும் நிதி அமைச்சின் தேசிய பாதீட்டு நிதியிலிருந்து கிழக்கு மாகாண நலன் கருதி அமைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் எம்.வி.எம்.சுபியான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி ஜெயந்தலால் ரட்ணசேகர, சுகாதார அமைச்சின் செயலாளர் H.M.W .G.திசாநாயக்க, கிழக்கு மாகாண கட்டடத் திணைக்கள பணிப்பாளர் புவனேஸ்வரி, முன்னாள் அரசாங்க அதிபர் ஜஸ்ரினா முரளீதரன், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சிறுவர் சீர்திருத்த உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து சிறுவர் இல்லத்தில் இருந்து குடும்பத்துடன் மீள் இணைக்கப்பட்டவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்காக துவிச்சக்கர வண்டி மற்றும் தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் ஆளுநர் மற்றும் அதிதிகளுக்கு நினைவு சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









