வடமத்திய, வடமேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (07.08.2026) வெளியிடப்பட்டுள்ள நிலையில் , நாளை (08.08.2026) காலை 11.30 மணி வரை அமலில் இருக்கும் எனவளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது .
அத்தோடு, தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக வடமத்திய, வடமேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் செயற்றப்படுமாறும் அத்துடன் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் அடுத்தடுத்த எச்சரிக்கைகளையும் கவனத்தில் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
(வளிமண்டலவியல் திணைக்களம்)


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()








